Friday, 27 May 2022

முன்பும் இன்றும்

குயிலின் கூச்சலில்

               திறந்த செவிகளோ

சாலையின் ஒலியில்

               செவிகள் அடைத்தன

நிலவின் ஒளியில்

                திறந்த கண்களோ

புகைச்சலை பார்த்து

                கண்கள் மூடின

பூக்களின் வாசத்தை

                நுகர்ந்த நாசியோ

சாக்கடை துர்நாற்றத்தில்

                நாசிகள் மூடின

சிறு குழந்தையை பார்த்து

                மகிழ்ந்த இதயமோ

கொலையும் கொள்ளையும் பார்த்து

                பயந்து துடித்தன...

கவிதைக்கு காரணங்கள்

கவிதை எழுதிட காரணம் தேடினேன்...


கண்ணால் கண்ட காரணங்கள் சில

கனவில் கண்ட காரணங்கள் பல


நினைவில் வந்த காரணங்கள் சில

நினைவால் வந்த காரணங்கள் பல


இயற்ற நினைத்த காரணங்கள் சில

இயற்கை தந்த காரணங்கள் பல


எழுத நினைத்த காரணங்கள் சில

எழுதாதிருக்கும் எழுத்துக்கள் பல...

Friday, 13 May 2022

மழைக்கு பிறந்த கவிதை

கவிதை எழுதிட வார்த்தைகள் 

                                            தேடினேன்

வார்த்தைக்கு இடையே கவிதையை

                                             தேடினேன்

வார்த்தையும் கிடைத்தது என் 

                                      கவிதையும் பிறந்தது

மரத்திலுருந்து விழும் மழைத்துளிகளை

                                             பார்க்கையிலே...


தன்மை அறியாமை

காற்றின் தன்மையரிந்து  மூங்கிலுக்கும் அடக்கி  இசையாக்கினோம்  கல்லின் தன்மையரிந்து உழிக்கொண்டு செதுக்கி  சிலையாக்கினோம்  மரத்தின் தன்மையரிந்த...