Monday, 18 October 2021

வார்த்தையின் வலிமை

வார்த்தைகள் வரிகளாய் ஆக

       வரிகள் வலிகளாய் ஆகும்

வலிகள் வர்த்தையாய் ஆக

      வாழ்க்கையே வலிகளாய் மாறும்...

Tuesday, 12 October 2021

குழப்பத்தில் நான்

புதிரான உலகம் தரும்

புதிரானவர்களால் உருவான

புரியாத செயல்களால்

புரியாமல் திகைத்து நிற்கும்

முட்டாலாக இருக்கின்றேன் நான் ...

 

 இனி அந்த செயலில் எனக்கு

 புரியவும் தேவை இல்லை

 இனி புரிவதற்கும் 

 ஒன்றும் இல்லை....

Monday, 11 October 2021

நீயும் நானும்

 அம்மா 

உன் கையில் 

நான்

உன் எண்ணத்தில்

 நான்

உன் செயலிலும்

 நான்

உன் உயிரிலும்

நான்

உன் அத்தனையும் நானாக இருக்க

நானே நீயாக மாறிடுவாய்...

Friday, 8 October 2021

கத்திருபதின் சுகம்

காத்திருப்பதும் சுகம்தான்

மழைக்காக காத்திருக்கும்      
                நிலம்போல் அல்ல 

நெற்கதிர்களுக்காக காத்திருக்கும் 
                  விவசாயிக்கு என்றும் 

காத்திருப்பதும் சுகம்தான்


Thursday, 7 October 2021

பொக்கிஷ கனவுகள்

மறந்திருக்கும் மனதில்
             புதைந்திருக்கும் உந்தன் 
                                             நினைவுகள்
புதைந்திருந்த நினைவுகளில்
              பொக்கிஷமாய் எந்தன்
                                             கனவுகள்....

Wednesday, 6 October 2021

கருவறை

தலைமையை விரும்பாமல் 

யாரையும் வெறுக்காமல்

கோபம் கொள்ளாமல்

ஆசைகள் இல்லாமல்

அன்பை மட்டும்

பெற்று வாழ்த்த இடம்

என் தாயின் 

கருவறை மட்டுமே...💕

Tuesday, 5 October 2021

அம்மாவின் கோபம்

காட்டில் பொழியும் அடைமழை அல்ல

அம்மாவின் கோபம்

மலர்மீது விழும் பனித்துளியே

அம்மாவின் கோபம்...



காட்டை அழிக்கும் காட்டுத்தீ அல்ல

அம்மாவின் கோபம்

ஒளியை அளிக்கும் தீபமாகவே இருக்கும்

அம்மாவின் கோபம்...



இயற்கையின் பேரிடர்கள் அல்ல

அம்மாவின் கோபம்

இயற்கையின் தென்றல் போன்றது

அம்மாவின் கோபம்...

Monday, 4 October 2021

நிஜத்தின் உண்மை

 கனவில் காண்பது நிஜதைவிட இனிதாக இருப்பின் கனவினிலே வாழ்ந்திருப்பேன்...

ஆனால்

காண்பதற்கு கனவில்லாமல் நிஜதையும் ரசிக்க முடியாமல் இருக்கும் நிலையை நான் எனவென்றுரைபது...🙂

தன்மை அறியாமை

காற்றின் தன்மையரிந்து  மூங்கிலுக்கும் அடக்கி  இசையாக்கினோம்  கல்லின் தன்மையரிந்து உழிக்கொண்டு செதுக்கி  சிலையாக்கினோம்  மரத்தின் தன்மையரிந்த...