Tuesday, 14 May 2024

தன்மை அறியாமை

காற்றின் தன்மையரிந்து  மூங்கிலுக்கும் அடக்கி 
இசையாக்கினோம் 

கல்லின் தன்மையரிந்து உழிக்கொண்டு செதுக்கி 
சிலையாக்கினோம் 

மரத்தின் தன்மையரிந்து அளவாக வெட்டி 
மேஜையாக்கினோம் 

மலரின் தன்மையரிந்து அழகாக கட்டி 
மாலையாக்கினோம் 

செடிகளின் தன்மையரிந்து பதமாக அரைத்து 
மருந்தயக்கினோம் 

மனளின் தன்மையறிந்து பதமாக கலந்து 
வீடாக்கினோம் 


அனைத்தின் தன்மைகளையும் அறிந்தும் நாம் 

மனிதனின் தன்மையை அறியாமல் 

தினமும் தோர்கிறோம் ...




Thursday, 25 April 2024

பிடித்தது

நீண்ட சாலைகள் என்னக்கு பிடிக்கும் 

        உன்னோடு நடக்கயில் 


மலர்ந்த பூக்கள் என்னக்கு பிடிக்கும் 

        உன்னக்காக பரிக்கையில் 


கவிதை என்னக்கு பிடிக்கும் 

        உன்னைப்பற்றி எழுதுகையில் 


என்னையும் என்னக்கு பிடிக்கும் 

        உன்னை நினைக்கையில் ...

புரிதல் வேண்டும்

மேகத்தின் செய்கை புரிந்தால் போதும் 

        மழையின் வருகை புரிந்துவிடும்  


கடலின் செய்கை புரிந்தால் போதும் 

        அலையின் வருகை  புரிந்துவிடும்  


காற்றின் செய்கை புரிந்தால் போதும் 

        சுவாசத்தின் பெருமை புரிந்துவிடும் 


 வாழ்வின் செய்கை புரிந்தால் போதும் 

        வாழ்க்கையின்  வலிமை புரிந்துவிடும்.. 


Tuesday, 12 March 2024

என் தனிமை


என்னைப் பெற்ற தாய் 

என் அருகில் இருந்தாலும் 

என்னை வளர்த்த தந்தை 

என் பக்கம் இருந்தாலும் 

காதலில் சிக்காமல் 

நான் இருந்தாலும் 

ஏனோ தனிமையில் இருப்பதை 

நான் உணர்கிறேன்..

Monday, 11 March 2024

நீயும் என் கவிதை

கவிதைக்கு பிறந்தவன் நான்

என் தாயும் கவிதைதான்

கவிதையால் பிறந்தவன் நான்

என் தந்தையும் கவிதைதான்

கவிதைக்கு மூத்தவனும் நான்

என் தங்கையும் கூட கவிதைதான்

இருப்பினும்,

கவிதைக்காக பிறந்தவன் நான் 

நீயும் என் கவிதை தான்..

Wednesday, 21 February 2024

நீ

கவிதைக்கு வார்த்தையாய் 

கவிதையின் பொருளாய் 

கவிமேல் உள்ள காதலாய் 

என்றும் உன் நினைவுகள்..


பார்த்திடும் பார்வையாய் 

பார்க்காத பொழுத்துகளாய் 

பார்வையில் ஏக்கமாய் 

என்றும் உன் நினைவுகள்..


நகர்ந்து செல்வதுமாய் 

நகராத நினைவுகளாய் 

நகரந்திடும் காலமாய் 

என்றும் உன் நினைவுகள்..




Thursday, 1 February 2024

எல்லாவுமாய் காதல்

அன்னையிடம் அன்பாய்  

தந்தையிடம் அறிவாய்இருப்பதும் காதல் 


தம்பியிடம் விளையாட்டாய் 

தங்கையிடம் கேலியும் காதல் 


நண்பனிடம் பேச்சுக்களாய் 

நண்பனின் நக்கல்களும் காதல் 


மாற்றங்களில் மாறாதிருப்பது 

மறதியிலும் மறக்காதிருப்பதும் காதல் 


மாற்றத்தால் மாறியிருப்பதும் 

மாறாததால் மாறியிருப்பதும் காதல் 


கண்களால் கண்டிருப்பதும் 

காணாதத்தை கனவில்காண்பதும் காதல் 


நினைவில் நிறைந்திருப்பதும்  

நினைவாக நிலைத்திருப்பதும் காதல் 


பார்க்காத  பார்வைக்காகவும் 

பாதையை பார்த்திருப்பதும்கூட காதல் 


எழுதாத எழுத்துக்களை 

எழுத ஏங்குவதும் காதல் 


சென்ற பொழுதிலும் 

கண்கள் கலங்குவதும் காதல் 

மறந்த பொழுதிலும் 

நினைவில் வருவதும் காதல் 


இல்லாத போதிலும் 

அனைவரிடமும் இருப்பதும் காதல் ...




தன்மை அறியாமை

காற்றின் தன்மையரிந்து  மூங்கிலுக்கும் அடக்கி  இசையாக்கினோம்  கல்லின் தன்மையரிந்து உழிக்கொண்டு செதுக்கி  சிலையாக்கினோம்  மரத்தின் தன்மையரிந்த...