Thursday, 25 August 2022

மெழுகும் தீயும்

எரியும் தீயின்

ஒளியை பார்த்து

பூரித்தது ஒருபக்கம்


தீயில் கரையும் 

மெழுகை போல

உருகியது மறுபக்கம்


எரியும் தீயின் ஒளியோ

கண்ணை பறித்தது


தீயில் கரையும் மெழுகோ

கண்ணை நினைத்தது


உருகும் மெழுகாக

நானும்

நான் தாங்கும் தீயாக 

என் கனவும்


இருந்திட ஆசைக்கொண்டேன்


நான் என்னும் மெழுகு

அணையும் வரை

கனவுத்தீ எரிந்திருக்கும்...

Wednesday, 17 August 2022

இன்றைய சுதந்திரம்

அரசியல் என்னும் சக்கரத்தை அமைத்து

ஜாதியெனும் கைப்பிடியை கொண்டு

பணத்தால் மேல்கூரை அமைத்து

ஜெனநாயகம் என்னும் கடிவாளத்தால் இணைத்து

மக்கள் என்னும்  சக்தியைக்கொன்டு இழுக்கவைத்து

மேல்குடியின் வளர்ச்சி பாதையை நோக்கி

சென்று கொண்டிருப்பதே

நமது சுதந்திர தேசம்...

Tuesday, 16 August 2022

கண்ணாடியும் நானும்

பேசவேண்டிய பொழுதுகளில் 

          பேசாமல் இருந்து

                 விழியால் பேசிக்கொண்டோம்


கடிதங்களும், கவிதைகளும்

          பல எழுதிக்கொண்டு

                 மொழியால் பேசிக்கொண்டோம்

 

வார்த்தைகள் போதாமல் 

           வரிகளை தீட்டி

                  இசையால் பேசிக்கொண்டோம்


பேசிக்கொண்டு பேசிக்கொண்டு

             பேசிக்கொண்டிருக்கையில்

                   பேசாமல் இருந்ததேனோ          

                           என் கண்ணாடி பிம்பமே...

தன்மை அறியாமை

காற்றின் தன்மையரிந்து  மூங்கிலுக்கும் அடக்கி  இசையாக்கினோம்  கல்லின் தன்மையரிந்து உழிக்கொண்டு செதுக்கி  சிலையாக்கினோம்  மரத்தின் தன்மையரிந்த...