Friday, 24 June 2022

நான் நீ

நான் என்பது நானாக

நானும் நீயாக

நீ என்பது நீயாக

நீயும் நானாக


நானும் நீயும் நாம் ஆக

நம்மை நாமே ரசித்திடுவோமே...

Sunday, 19 June 2022

கல்லூரி காலம் அது

 கல்லூரி நினைவுகள்


காணும் காட்சிகளில் காணா கனவுகளையும்

கண்டிடாத காட்சிகளில் கண்ட கனவுகளையும்

கண்டது போல நடித்துக்கொண்டு இருங்கும் காலம் அது 



நிறைய கனவுகளும்

நிறைந்த வலிமையும்

நிலைத்த பொறுமையும்

நிறைந்த காலம் அது


சோம்பேறித்தனத்தின் சுகம் கண்ட காலம் அது



சாதிக்க நினைப்பதும்

சண்டைகள் போடுவதும்

சாவடி அடிப்பதும்

சமாதானமாக போவதும் 

கலந்த காலம் அது


சண்டைகளில் நட்பை உணர்ந்த காலம்      அது 



பேசிடலாம் என்று பேசி

பழகிடலாம் என்று பழகி

சிரித்திடலாம் என்று சிரித்து

வாழ்ந்த காலம் அது


சந்தோஷத்தை மட்டும் பெற்று வாழ்த்த காலம் அது



பிரிய நியரும் போது

கண்ணீர் விடாமல் தடுத்து தாங்கி

சிரிப்பில் பிரிந்த 

நட்பு அது


கண்ணீரையும் சிரிப்பில் உணர்ந்த காலம் அது

Tuesday, 7 June 2022

மறப்பதும்

உன்னை மறக்க வேண்டும்

உன்னை மறக்க வேண்டும் 

என்று நினைத்திருக்கும்

என் எண்ணமே 

உன்னை மறக்க விடாமல் 

செய்கிறது...

Sunday, 5 June 2022

இன்றும் அவள்

அவளுக்கான வரிகளை தாங்கிய

                                                 என் கைகள்

இன்று அவளுக்கான பிராத்தனையை

                                     மட்டும் செய்கிறது

Saturday, 4 June 2022

ஏனோ

கவிதை எழுதிட நெஞ்சம் துடிக்குது

               ஏனோ வார்த்தைகள் 

                              மறுக்கின்றது


எழுதிய கவிதையின் வார்த்தைகளோ 

                 ஏனோ வலிகளை

                              தருகின்றது


பார்த்து பார்த்து ரசித்த இடங்களோ 

                ஏனோ அழகை 

                            மரைக்கிறது 


கேட்டக்க விரும்பா பாடல் ஒன்று 

                ஏனோ காதினிலே 

                            ஒலிக்கிறது 


பேச நினைக்க எண்ணியபோது 

                ஏனோ வார்த்தை 

                            தயங்கியது 


பேச வந்த வார்த்தை மட்டும் 

                ஏனோ மௌனம் 

                            கொள்கிறது...


Friday, 3 June 2022

திருமண வாழ்த்து

 கவிதை எழுதிட கைகள் துடிக்குது


எழுத முடியாமல் நெஞ்சம் தவிக்குது


எழுத நினைத்த கவிதையோ


உன் திருமணத்திற்கு வாழ்த்துகளாக 

மாரிப்போனதே...😢

Thursday, 2 June 2022

பயணம்

பயணத்தின் தொடக்கத்தையும் முடிவையும்

இணைப்பது பாதை


தொடங்கிய பொழுது ஆர்வத்தையும் 

முடிவில் நல்ல நினைவளிப்பதும் பயணம்


மேடுப்பல்லங்கள் இருப்பினும் மகிழ்ச்சியை

குறைக்காமல் தருவது காட்சிகள்


காணும் காட்சியில் உள்ள ஆபத்தும்

ஆபத்தில் ஒளிந்திருக்கும் அழகும்

அவ்வழகை நெருங்கும் ஆர்வமும்

நெருங்கியதும் கிடைக்கும் ஆனந்தமும்

கிடைத்திருக்கும் பயணத்தின் நேரத்தில்

தோன்றியது இக்கவிதை...

தன்மை அறியாமை

காற்றின் தன்மையரிந்து  மூங்கிலுக்கும் அடக்கி  இசையாக்கினோம்  கல்லின் தன்மையரிந்து உழிக்கொண்டு செதுக்கி  சிலையாக்கினோம்  மரத்தின் தன்மையரிந்த...