Saturday, 29 October 2022

சொல்லும் கனவும்

சொல்லிய சொல்லின்

                வலியை காட்டினும்

சொல்லாத சொல்லின்

                வலியே கொடியது

சொல்லில் முடிந்த 

                வலியின் வேகமும்

சொல்ல முடியா

               வலியின் சோகமும்

சொல்லில் அடங்கா

                வலிகளின் எண்ணமும்

சொல்ல சொல்லும்

                 வரிகளின் வழியே

சொல்லும் சொல்லில்

                 சொல்லா கனவினை

சொல்லும் பொழுதினில்

                  நினைவாகி விடுமே....


Saturday, 15 October 2022

பாதை

புதிதாய் ஒரு பாதை கிடைத்தது

பயனத்தின் பாதியில்

பாதையில் தடைகள் இல்லை

பயணத்தில் வலிகளில்லை

பயணம் முடிந்ததும் கற்றது

பயனும் இல்லை

பாதையில் தடைகள் தாண்டினால்

பயணத்தில் அனுபவமுன்டு

பயணம் முடிந்ததும் அனுபவத்தில்

பாதையை தேடி

பயனத்தின் முடிவை கவனமாக

பார்த்து கடந்து

பயணத்தின் வழியை எல்லோரிடமும்

பகிர்ந்திடுவோமே நாம்....



Monday, 3 October 2022

துளிகள்

தூராதே மழையே

தூரிய பொழுதுகளில் நினையா நினைவுகளும்

துளிகளில் தெரிகிறதே...


தூரிடும் மழையே

தூரிடும் பொழுதுகளில் விழுந்திடும் கண்ணீரை

துளிகளும் துடைத்ததே...


தூராதே மழையே

தூங்கிடும் பொழுதுகளில் தூங்காமல் விழித்திடுமே

என் விழியே...


தூரிடும் மழையே

தூரிடும் பொழுதுகளில் மறக்காத நினைவுகளும்

மறந்திடும் துளிகளிலே...

தன்மை அறியாமை

காற்றின் தன்மையரிந்து  மூங்கிலுக்கும் அடக்கி  இசையாக்கினோம்  கல்லின் தன்மையரிந்து உழிக்கொண்டு செதுக்கி  சிலையாக்கினோம்  மரத்தின் தன்மையரிந்த...