Monday, 3 October 2022

துளிகள்

தூராதே மழையே

தூரிய பொழுதுகளில் நினையா நினைவுகளும்

துளிகளில் தெரிகிறதே...


தூரிடும் மழையே

தூரிடும் பொழுதுகளில் விழுந்திடும் கண்ணீரை

துளிகளும் துடைத்ததே...


தூராதே மழையே

தூங்கிடும் பொழுதுகளில் தூங்காமல் விழித்திடுமே

என் விழியே...


தூரிடும் மழையே

தூரிடும் பொழுதுகளில் மறக்காத நினைவுகளும்

மறந்திடும் துளிகளிலே...

1 comment:

  1. துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத் துப்பாய தூஉம் மழை.

    ReplyDelete

Share your feedback to improvised myself

தன்மை அறியாமை

காற்றின் தன்மையரிந்து  மூங்கிலுக்கும் அடக்கி  இசையாக்கினோம்  கல்லின் தன்மையரிந்து உழிக்கொண்டு செதுக்கி  சிலையாக்கினோம்  மரத்தின் தன்மையரிந்த...