Thursday, 1 February 2024

எல்லாவுமாய் காதல்

அன்னையிடம் அன்பாய்  

தந்தையிடம் அறிவாய்இருப்பதும் காதல் 


தம்பியிடம் விளையாட்டாய் 

தங்கையிடம் கேலியும் காதல் 


நண்பனிடம் பேச்சுக்களாய் 

நண்பனின் நக்கல்களும் காதல் 


மாற்றங்களில் மாறாதிருப்பது 

மறதியிலும் மறக்காதிருப்பதும் காதல் 


மாற்றத்தால் மாறியிருப்பதும் 

மாறாததால் மாறியிருப்பதும் காதல் 


கண்களால் கண்டிருப்பதும் 

காணாதத்தை கனவில்காண்பதும் காதல் 


நினைவில் நிறைந்திருப்பதும்  

நினைவாக நிலைத்திருப்பதும் காதல் 


பார்க்காத  பார்வைக்காகவும் 

பாதையை பார்த்திருப்பதும்கூட காதல் 


எழுதாத எழுத்துக்களை 

எழுத ஏங்குவதும் காதல் 


சென்ற பொழுதிலும் 

கண்கள் கலங்குவதும் காதல் 

மறந்த பொழுதிலும் 

நினைவில் வருவதும் காதல் 


இல்லாத போதிலும் 

அனைவரிடமும் இருப்பதும் காதல் ...




1 comment:

Share your feedback to improvised myself

தன்மை அறியாமை

காற்றின் தன்மையரிந்து  மூங்கிலுக்கும் அடக்கி  இசையாக்கினோம்  கல்லின் தன்மையரிந்து உழிக்கொண்டு செதுக்கி  சிலையாக்கினோம்  மரத்தின் தன்மையரிந்த...